நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி தனது கடின உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் வெள்ளி திரைக்கு வந்து தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கியுள்ளார். அதன்படி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறிவிட்டார். இவர் தற்போது தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது ஆர்.ஜே. பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜி. பாலாஜி சொர்க்கவாசல் படம் குறித்தும் தான் கடந்து வந்த பாதை குறித்தும் பேசியுள்ளார். அதேசமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை கலாய்க்கும் ஷோ ஒன்றை தான் செய்ததாகவும் அதில் வேறொரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் எமோஷனலானதை கலாய்த்ததாகவும் கூறினார். மேலும் தான் அந்த ஷோவை செய்யும்போது தனக்காது தவறாக தெரியவில்லை என அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர்தான் தன் தவறை உணர்ந்ததாக தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி அதன் பிறகு சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.