Homeசெய்திகள்சினிமாமிஸ்டர் லோக்கல் பட லுக்கில் சிவகார்த்திகேயன்...... 'SK23' ஃபர்ஸ்ட் ஷாட் இணையத்தில் வைரல்!

மிஸ்டர் லோக்கல் பட லுக்கில் சிவகார்த்திகேயன்…… ‘SK23’ ஃபர்ஸ்ட் ஷாட் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் பட லுக்கில் சிவகார்த்திகேயன்...... 'SK23' ஃபர்ஸ்ட் ஷாட் இணையத்தில் வைரல்!இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்ததாக படமானது 2024 செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் , ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.மிஸ்டர் லோக்கல் பட லுக்கில் சிவகார்த்திகேயன்...... 'SK23' ஃபர்ஸ்ட் ஷாட் இணையத்தில் வைரல்! மேலும் விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோரும் இவர்களுடன் இணைந்து நடிக்கின்றனர். படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த கமர்சியல் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மிஸ்டர் லோக்கல் பட லுக்கில் சிவகார்த்திகேயன்...... 'SK23' ஃபர்ஸ்ட் ஷாட் இணையத்தில் வைரல்!இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் பட லுக்கில் காணப்படுகிறார். எனவே படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் SK23 படம் மாஸான கமர்சியல் பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ