- Advertisement -
கோவை பேரூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடித்த போதிலும், அனைத்துமே குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் மாவீரன் திரைப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
https://twitter.com/i/status/1747244770555208044
நடப்பு ஆண்டில் அவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் அயலான். நேற்று இன்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நீண்ட இடைவௌியாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
கோவையில் உள்ள கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம். pic.twitter.com/0xw8oibJRE
— Thecovai news (@ThecovaiN47222) January 16, 2024



