நடிகர் சிவகார்த்திகேயன் இளையராஜாவின் நேரில் சந்தித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏனென்றால் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எனவே தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்த வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி, விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார். அதாவது இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா வருகின்ற மார்ச் 8ஆம் தேதி லண்டனில் தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்ற இருக்கிறார். இதற்காக கமல் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.