நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரகனி, பாபி சிம்ஹா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேசமயம் மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா ஆகியோர் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்த படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 25) இதன் ட்ரெய்லரும் வெளியானது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது இந்த படத்தில் சித்தார்த்தின் கதாபாத்திரத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம். இது தொடர்பாக பட குழு சிவகார்த்திகேயனை அணுகிய போது சிவகார்த்திகேயனுக்கு கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் உலக நாயகன் படத்தில் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாமல் போனதே என்று தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.