நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. மேலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதில் மதராஸி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில், அஜித்தின் வாலி திரைப்படத்தில் இடம் பெற்ற ஓ சோனா பாடலை நண்பர்களுடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்தது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.