சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகியிருந்த அமரன் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும் ஜி.வி பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை கையாண்ட விதமும் அருமையாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசிய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் பேசியிருந்தார். “எல்லோருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரியும். ஆனால் யாருக்கும் என்னுடைய அப்பா ஜெயிலர் போஸ் பற்றி தெரியாது. இந்த படத்தில் நான் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு என் அப்பா தான் காரணம். இதுவரைக்கும் அவர் பற்றிய பல விஷயங்களை கேள்வி பட்டு கொண்டிருக்கின்றேன். கடந்த 21 வருடங்களாகவே அவருடைய நினைவுகளுடன் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமரன் படத்தின் மூலம் நான் அவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த படத்தில் நான் அப்பாவாக இருக்க முயற்சி செய்தேன். முகுந்த் சாருக்கும் என் அப்பாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது. அப்பா இறந்த பிறகு என்னுடைய மொத்த வாழ்க்கையும் மாறியது. என் அப்பாவுடைய இறுதிச்சடங்குக்கு பின் அப்பாவின் உடைந்த எலும்புகளை நான் பார்த்தேன்.
17 வயது பையனின் வாழ்க்கையும் அப்போதே முடிந்து விட்டது. ஆனால் இன்று அமரன் படத்தின் மூலம் அந்த உடைந்த எலும்புகளை ஒட்டி என்னை ஆளாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. அமரன் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியும் என்னுடைய வாழ்க்கையும் ஒன்றுதான். அமரன் படத்தை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றீர்கள். இந்த இடத்தை எனக்கு தந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி” என்று கண்கலங்கி பேசினார் சிவகார்த்திகேயன்.
அவர் இறந்த பின் என் மொத்த வாழ்க்கையும் மாறியது…. அப்பாவை நினைத்து கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!
-
- Advertisement -