சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்ன திரையில் பணியாற்றி அதன்பிறகு வெள்ளித் திரைக்கு வந்து தற்போது ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக அதாவது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உலக நாயகன் கமல்ஹாசன் படத்தினை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். C.H. சாய் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே படமானது வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் நாளில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆக்சன் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. மேலும் எமோஷனல் காட்சிகளும் காட்டப்படுகின்றன. சிவகார்த்திகேயன் – சாய்பல்லவிக்கும் இடையேயான காதல் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.