நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இந்த படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதாவது சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு SK23 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிக்க உள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சுதா கொங்கரா இயக்க இருந்த புறநானூறு திரைப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் நடிகர் சூர்யா வெளியேறி விட்டதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் தனுஷ் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் புறநானூறு படத்தில் சூர்யாவும் இல்லை. தனுஷும் இல்லை. சிவகார்த்திகேயன் தான் நடிக்கப்போகிறார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறநானூறு படம் தொடர்பாக தான் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை சந்தித்து பேசினார் என்றும் இந்தப் படம் தான் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக அமையும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு தற்போது தி கோட் திரைப்படத்தை இயக்கி வருவதால் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அதே சூட்டில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படி இல்லை கோட் திரைப்படம் வெற்றியை தரவில்லை என்றால் வெங்கட் பிரபுவுடனான தனது படத்தை அப்படியே தள்ளி வைத்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -