spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் SK21 பட லுக்.... இணையத்தில் பரவும் புகைப்படம்!

சிவகார்த்திகேயனின் SK21 பட லுக்…. இணையத்தில் பரவும் புகைப்படம்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் SK21 பட லுக்.... இணையத்தில் பரவும் புகைப்படம்!நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கி இருந்த மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK21 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று சில தினங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிளீன் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.சிவகார்த்திகேயனின் SK21 பட லுக்.... இணையத்தில் பரவும் புகைப்படம்!

அதாவது சிவகார்த்திகேயன் இளம் வயதில் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் (ஃபிளாஷ் பேக்) காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

we-r-hiring

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தலைவர் 171 படத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ