spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் ராயன்... மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா...

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக பெயர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அவரது உடல் தோற்றத்திற்கும், நிறத்திற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விமர்சனங்களுக்கு தனது திரைப்படங்கள் வாயிலாகவும், நடிப்பின் வாயிலாகவும் பதில் கொடுத்து வாயை அடைத்தார் நடிகர் தனுஷ்.

அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மீண்டும் இத்திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். முன்னதாக பா.பாண்டி படத்தை இயக்கி நடித்தார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது படத்தில், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்து முதல் தோற்றத்தையும்படக்குழு வௌியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ