சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சூரி
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்து தயாரிக்க உள்ள திரைப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் படங்களின் வரிசையில், ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில், விடுதலை படத்திற்கு பிறகாக நடிகர் சூரி மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இப்படத்திற்கு “கொட்டுக்காளி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் முதல் பார்வை டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.