spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவில்லனாக நடிக்கும் சூரி ...... எந்த படத்தில் தெரியுமா?

வில்லனாக நடிக்கும் சூரி …… எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

சூரி வில்லனாக நடித்துள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வில்லனாக நடிக்கும் சூரி ...... எந்த படத்தில் தெரியுமா?நகைச்சுவை நடிகரான சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் சூரி. அதேசமயம் சூரிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அதன்படி ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் எனும் திரைப்படம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சூரி கொட்டுக்காளி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க பி.எஸ். வினோத் ராஜ் படத்தை இயக்குகிறார். படத்தில் சூரியுடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். வில்லனாக நடிக்கும் சூரி ...... எந்த படத்தில் தெரியுமா?படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் சூரி வில்லனாக நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் சூரி வில்லனாக கொட்டுக்காளி படத்தில் தனது நடிப்பை எப்படி வெளிப்படுத்தி இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ