நடிகர் சூரி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சூரி, தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை, கருடன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த நிலையில், சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத் தவிர சூரி, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார் சூரி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதற்கிடையில் மாமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது லோகேஷ் கனகராஜ், என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பத்து கதைகள் வந்தால் அதை ஐந்து கதைகள் சூரிக்காக வருகிறது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் சூரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
#Soori Recent Interview
– #LokeshKanagaraj has told me two or three stories.
– I have three stories under Lokesh Sir’s production and I may act in a film under his production in the future.
– I will definitely act in a film directed by Lokesh.#Coolie
pic.twitter.com/lVZwxXA6Om— Movie Tamil (@MovieTamil4) May 19, 2025

அதற்கு சூரி, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. டாப் இயக்குனர்களில், இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான ஒருவர். அவருடைய தயாரிப்பின் கீழ் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார். வருங்காலத்தில் அவருடைய தயாரிப்பில் நான் நடிப்பேன் என்று நினைக்கிறேன். இது தவிர அவருடைய டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. அதுவும் நடக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.