spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிநடை போடும் கருடன்... படக்குழு கொண்டாட்டம்...

வெற்றிநடை போடும் கருடன்… படக்குழு கொண்டாட்டம்…

-

- Advertisement -
kadalkanni
நடிகர் சூரி, கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதனிடையே, சூரி நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் கருடன். இத்திரைப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், மலையாள பிரபலம் உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைந்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் முன்னரே வெளியாகி ஹிட் அடித்தன. இந்நிலையில், இத்திரைப்படம் கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. கிராம பின்னணியில் மண்மனம் மாறாத கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், வசூலையும் குவித்து வருகிறது. படத்தில் சூரியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்படுகிறது. இனி அவர் ஆக்‌ஷன் ஹீரோ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கருடன் படக்குழுவினரும் வெற்றியை கொண்டாடியுள்ளனர். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மாலை அணிவித்து படக்குழு கொண்டாடித் தீர்த்தது

MUST READ