சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதே சமயம் கடந்தாண்டு வெற்றிமாறன் நடிப்பில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக களம் இறங்கி பெயர் பெற்றார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் சூரி. அதன்படி சூரி நடிப்பில் உருவாகியிருந்த கருடன் திரைப்படம் நேற்று (மே 31) திரையிடப்பட்டது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். வெற்றிமாறன் தயாரிப்பிலும் கதையிலும் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. கிராமத்து கதைக்களத்தில் இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது நடிகர் சூரி இதுவரை இல்லாததை போல் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி இருக்கிறார். மேலும் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோரும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதை சமயம் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு பலரும் கருடன் திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில் இந்த படமானது முதல் நாளில் மூன்று கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.