Homeசெய்திகள்சினிமாமாமனாக ஜெயித்தாரா சூரி?.... திரை விமர்சனம் இதோ!

மாமனாக ஜெயித்தாரா சூரி?…. திரை விமர்சனம் இதோ!

-

- Advertisement -

மாமன் படத்தின் திரை விமர்சனம்.மாமனாக ஜெயித்தாரா சூரி?.... திரை விமர்சனம் இதோ!

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பாபா பாஸ்கர், சுவாசிகா, கீதா கைலாசம், பால சரவணன் ன்கியோரின் நடிப்பில் இன்று (மே 16) உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்.எல்லாருக்கும் பிடித்த படமாக இருக்கும்.... 'மாமன்' குறித்து சூரி வெளியிட்ட வீடியோ!

இந்த படமானது தாய் மாமனுக்கும் – குட்டி மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எமோஷனல் ஃபேமிலி என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கிறது. சமீபகாலமாக தாய்மாமன்- மருமகன் உறவை மையமாக வைத்து எந்த படமும் வெளியாகவில்லை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. ட்ரைலரில் பார்த்ததை போல் நடிகர் சூரி எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.மாமனாக ஜெயித்தாரா சூரி?.... திரை விமர்சனம் இதோ! அதாவது நடிகர் சூரி, ஒரு நகைச்சுவை நடிகர் என்பது மாமன் படத்தில் எந்த இடத்திலுமே தெரியவில்லை. அந்த அளவிற்கு ஹீரோவாக தன்னுடைய நடிப்பினால் படம் முழுவதையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா லக்ஷ்மி, அழகான கதாநாயகியாக, எமோஷனல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். குட்டி மருமகனாக நடித்திருக்கும் அந்த சிறுவன் செய்யும் அலப்பறைகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இவ்வாறு படத்தில் முதல் பாதி நகைச்சுவையாக நகர இடைவேளையில் எதிர்பாராத ஒரு கேரக்டரை பற்றி பேசுவது சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. மாமனாக ஜெயித்தாரா சூரி?.... திரை விமர்சனம் இதோ!இரண்டாம் பாதி முழுக்க மாமனுக்கு – மருமகனுக்குமான பாசப் போராட்டமாக கதை நகர்கிறது. அதன்படி இரண்டாம் பாதி சற்று சலிப்பை தருவது போல் இருந்தாலும் ராஜ்கிரணின் கதாபாத்திரம் அதை மறக்க வைக்கிறது. இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் கதாபாத்திரங்களின் தேர்வு படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.மாமனாக ஜெயித்தாரா சூரி?.... திரை விமர்சனம் இதோ! ஹேசம் அப்துல் வாகபின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஒரு சில காட்சிகளைத் தவிர பெரிய அளவில் சலிப்பை தராத திரைக்கதை, எமோஷனல் காட்சிகள், சண்டை காட்சிகள் ஆகியவை ஒர்க் அவுட் ஆகியுள்ளன. மொத்தத்தில் மாமன் படத்தை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

MUST READ