சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. அதாவது நடிகர் சூரியை பெரும்பாலான படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால் விடுதலை, கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். மேலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு மண்டாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டைட்டிலையும், போஸ்டரையும் பார்க்கும்போது இது வித்தியாசமான படமாக உருவாகி வருவது போல் தெரிகிறது. எனவே இந்த டைட்டிலும், போஸ்டரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில், “எல்லையற்ற கடல் தன்னில் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும் போது நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது” என்று குறிப்பிட்டு டைட்டில் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். மேலும் நாளை (ஏப்ரல் 19) இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.