சொப்பன சுந்தரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது.
சிறந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், சொப்பன சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Ready for some ROFL moments this April? #SoppanaSundari by @SGCharles2 has got you covered 🤣🔥
Worldwide release on April 14 ♥️@aishu_dil @Hamsinient @HueboxStudios @vithurs_ @deepa_iyer_ @LakshmiPriyaaC @KingsleyReddin #AhimsaEntertainment pic.twitter.com/sr5W8Ab3Bp
— Ahimsa Entertainment (@ahimsafilms) March 29, 2023