spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்பு படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்கள்

சிம்பு படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்கள்

-

- Advertisement -
சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டின் லிட்டல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. மாநாடு படத்திற்கு கிடைத்த வெற்றி சிம்புவுக்கு மீண்டும் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து தற்போது சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்க அவருக்கு மகனாக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாகவே, கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தில் சிம்பு கமிட்டாகி இருந்தார். இத்திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இது சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வாணி மற்றும் ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது

MUST READ