நடிகர் மாதவனுக்கு அசத்தலான விருந்து வைத்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.
தமிழ் சினிமாவின் தேர்ந்த இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் சுதா கொங்கரா. அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.
சுதா கொங்கரா தனது இயக்குனர் பயணத்தை துரோகி படத்தின் மூலம் துவங்கினார். அதையடுத்து ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரு பயிற்சியாளருக்கு உண்டான மிடுக்குடன் தோன்றி அந்தக் கதாபாத்திரத்திற்கு அசத்தலாக பொருந்தியிருந்தார். இறுதிச் சுற்று படத்தின் மூலம் மாதவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்தப் படத்தில் இருந்து மாதவன் மற்றும் சுதா கொங்கரா இடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா மாதவனுக்கு தனது வீட்டில் வைத்து அறுசுவை விருந்து வைத்து அசத்தியுள்ளார். மாதவன் சுதா கொங்கராவின் கைவண்ணத்தை ரசித்து சாப்பிடும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இதற்கிடையில் மாதவன் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோரும் நடிக்கின்றனர். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கைப் படத்திலும் மாதவன் நடிக்க உள்ளார்.