Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி - வடிவேலு காம்போவின் 'கேங்கர்ஸ்' .... ப்ரோமோவுடன் வெளியான கலக்கல் அப்டேட்!

சுந்தர்.சி – வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’ …. ப்ரோமோவுடன் வெளியான கலக்கல் அப்டேட்!

-

- Advertisement -

சுந்தர்.சி, வடிவேலு காம்போவின் கேங்கர்ஸ் பட அப்டேட் வெளியாகி உள்ளது.சுந்தர்.சி - வடிவேலு காம்போவின் 'கேங்கர்ஸ்' .... ப்ரோமோவுடன் வெளியான கலக்கல் அப்டேட்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சுந்தர். சி தற்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர், கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்கி உள்ளார். அந்த வகையில் லேடி கெட்டப் உள்ளிட்ட பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்திலும் வைரலாகி வந்தது. எனவே இந்த படத்தை காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘குப்பன்’ எனும் பாடல் இன்று (ஏப்ரல் 11) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சத்யா சி இதற்கு இசையமைத்துள்ளார். இ. கிருஷ்ணசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ