சுந்தர்.சி – வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சுந்தர்.சி-யின் நடிப்பிலும் இயக்கத்திலும் திரைக்கு வந்த படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி ஆகியோர் சுந்தர்.சியுடன் இணைந்து நடித்திருந்தனர். அதிலும் வடிவேலு மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுத்திருந்தார். ஏற்கனவே சுந்தர்.சி – வடிவேலு ஆகிய இருவரும் நகரம், தலைநகரம் ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இருவரின் காம்பினேஷனில் வெளியான காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான கேங்கர்ஸ் திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி. சத்யா இந்த படத்தில் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய வடிவேலுவை பார்க்க முடிகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் இன்று (மே 15) அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.