Homeசெய்திகள்சினிமாஅந்த விஷயத்திற்கு நோ... நயன்தாராவின் நிபந்தனையை நிராகரித்த சுந்தர்.சி .... 'மூக்குத்தி அம்மன் 2' பட அப்டேட்!

அந்த விஷயத்திற்கு நோ… நயன்தாராவின் நிபந்தனையை நிராகரித்த சுந்தர்.சி …. ‘மூக்குத்தி அம்மன் 2’ பட அப்டேட்!

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அந்த விஷயத்திற்கு நோ... நயன்தாராவின் நிபந்தனையை நிராகரித்த சுந்தர்.சி .... 'மூக்குத்தி அம்மன் 2' பட அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த விஷயத்திற்கு நோ... நயன்தாராவின் நிபந்தனையை நிராகரித்த சுந்தர்.சி .... 'மூக்குத்தி அம்மன் 2' பட அப்டேட்! அதன்படி இந்த படமானது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இதில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, ரெஜினா மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை பிரம்மாண்ட பொருட்செலவில் நடத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தின் கதை அல்லது இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று எடுக்கப்படுகிறதாம். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நயன்தாரா அம்மனாகவும், நிகழ்காலத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறாராம்.அந்த விஷயத்திற்கு நோ... நயன்தாராவின் நிபந்தனையை நிராகரித்த சுந்தர்.சி .... 'மூக்குத்தி அம்மன் 2' பட அப்டேட்! ஏற்கனவே நயன்தாரா, போலிஸ் அதிகாரியாக சில படங்களில் நடித்திருந்தாலும் அதில் காக்கி சட்டையில் நடித்திருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கதைக்கேற்ப நயன்தாரா காக்கிச்சட்டை போட வேண்டும் என சுந்தர்.சி கூறி இருக்கிறாராம். நயன்தாரா ஒரு சில காரணங்களால் அதை மறுக்க, காக்கி சட்டை அடைந்திருக்கும் காட்சிகளை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நிச்சயம் காக்கி சட்டை போட்டு தான் ஆக வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் சுந்தர். சி. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நயன்தாராவை காக்கி சட்டையில் காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ