பிரபுதேவா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வுல்ஃப், ஜாலியோ ஜிம்கானா உள்ள படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையில் பிரபுதேவா, எஸ் ஜே சினு இயக்கும் பேட்ட ராப் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. காமெடி கலந்த கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் பேட்ட ராப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்த மற்றொரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு சன்னி லியோன் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடியுள்ளாராம். இது குறித்து சன்னி லியோன், சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “பிரபுதேவாவின் ரசிகை நான். அவரின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். பேட்ட ராப் படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடி இருக்கிறேன். முதலில் அவருடன் நடனம் ஆடும் போது பதட்டமாக இருந்தது. பின்னர் அப்படியே சமாளித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.