Homeசெய்திகள்சினிமா'ராயன்' படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

‘ராயன்’ படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

-

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ராயன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.'ராயன்' படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷே இயக்கியும் இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஓம் பிரகாஷ் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களின் தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். எஸ் ஜே சூர்யா இதில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படமானது வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ராயன் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நடிகர் தனுஷ் அற்புதமாக இயக்கி நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் சந்தீப் கிஷன் மற்றும் அனைத்து நடிகர்களும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேஸ்ட்ரோ ஏ ஆர் ரகுமானின் இசை மிரட்டுகிறது. இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ