spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவந்தது சூப்பர் அப்டேட்...சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

-

- Advertisement -

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வந்தது சூப்பர் அப்டேட்...சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

சென்னை மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான அனுமதியை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி வழங்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதையடுத்து, இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லி – வடபழனி இடையே சுமார் 15.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த புதிய மெட்ரோ பாதை, நகரின் மேற்குப் பகுதிகளுக்கும் மத்திய பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி – வடபழனி இடையே விரைவில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரயில் சேவை அறிமுகமாகும் இந்த திட்டம், நகர்ப்புறப் போக்குவரத்தில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றமாக கருதப்படுகிறது.

பூந்தமல்லி பைபாஸ் – வடபழனி மெட்ரோ திட்டத்திற்கு கிடைத்த இந்த அனுமதி, சென்னையின் மெட்ரோ விரிவாக்கத்தில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. நகர மக்கள் தினசரி பயணத்தில் அதிக வசதி, குறைந்த நேரச் செலவு மற்றும் பாதுகாப்பான சேவையை பெறும் வகையில் இந்த புதிய பாதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

MUST READ