spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா11 நாட்கள் ஓய்வுக்கு பின் சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

11 நாட்கள் ஓய்வுக்கு பின் சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

-

- Advertisement -
வேட்டையன் படப்பிடிப்புக்கு பிறகு ஓய்வெடுக்க அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்த், தற்போது சென்னை திரும்பியிருக்கிறார்.

கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இத்திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். மேலும், படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

https://x.com/i/status/1795306239855128690

we-r-hiring
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி புறப்பட்டுச் சென்றார். அங்கு, பிரபல தொழில் அதிபர் லுலு குழுமத் தலைவரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

தொடர்ந்து அபுதாபியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து 11 நாட்கள் ஓய்வுக்கு பின்னர், ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி உள்ளன. மேலும், அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

MUST READ