spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பாராத காம்போவில் 'சூர்யா 44'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எதிர்பாராத காம்போவில் ‘சூர்யா 44’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

சூர்யாவின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக செம அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.எதிர்பாராத காம்போவில் 'சூர்யா 44'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா தற்போது நடித்துவரும் கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக பிரத்தியேகமாக அறிவிப்பு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கங்குவா படத்துக்குப் பின் சூர்யா, இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் சமீபத்தில் இந்த படம் தொடர்பாக வெளியாகும் தகவலின் படி புறநானூறு படம்
கைவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் காம்போவின் சூர்யா 44 குறித்த அறிவிப்பு யாரும் எதிர்பாராத ஒன்றாக வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் இணையும் இப்படமும் நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

we-r-hiring

அறிவிப்பு போஸ்டரில் LOVE, LAUGHTER, WAR என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ