‘சூர்யா 44’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும், பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
Unveiling the crew of #Suriya44 🔥
Get ready to meet them! Today 6 PM 🕕 #LoveLaughterWar ❤️🔥#AKarthikSubbarajPadam 📽️@Suriya_Offl @karthiksubbaraj @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @stonebenchers pic.twitter.com/GloR7brmGp
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 29, 2024
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட்டை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.