Homeசெய்திகள்சினிமாகொடைக்கானலில் நடைபெறும் 'சூர்யா 45' படப்பிடிப்பு!

கொடைக்கானலில் நடைபெறும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14 உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.கொடைக்கானலில் நடைபெறும் 'சூர்யா 45' படப்பிடிப்பு! இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது நடிகர் சூர்யா, வாடிவாசல் போன்ற படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதற்கு முன்பாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கவுள்ளார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதாவது கிராமத்துக் கதைக்களத்தில் ஆண் தெய்வம் ஒன்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது.கொடைக்கானலில் நடைபெறும் 'சூர்யா 45' படப்பிடிப்பு! மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகள் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பாக மிர்ணாள் தாகூர், காஷ்மிரா பர்தேசி, ருக்மினி வசந்த் ஆகிய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் கொடைக்கானல் பகுதியில் தொடங்கப்பட இருப்பதாகவும் அதை தொடர்ந்து ஊட்டியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. எனவே மற்ற அப்டேட்டுகளும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ