spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ரெட்ரோ' படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?

‘ரெட்ரோ’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?

-

- Advertisement -

சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 'ரெட்ரோ' படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அதே சமயம் நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜும் சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என நம்பப்படுகிறது. 'ரெட்ரோ' படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?இந்நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூர்யாவிடம் ரெட்ரோ படத்தின் எடிட்டிங் வெர்ஷனை காட்டியுள்ளாராம். அதை பார்த்த சூர்யா எதிர்பார்த்ததை விட படம் நன்றாக வந்திருக்கிறது என மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இதனால் மீண்டும் நாம் ஒரு படம் பண்ண வேண்டும் என கூறி இருக்கிறாராம் சூர்யா. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இருப்பினும் ரெட்ரோ படத்தின் வெற்றியைப் பொறுத்தே இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ