சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்.
We proudly announce #Suriya45 – a groundbreaking collaboration featuring the versatile @Suriya_offl🔥, the musical legend @arrahman❤️, and the talented @RJ_Balaji. A powerful journey begins!💥@prabhu_sr ✨ pic.twitter.com/7O37KDIOqy
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2024
சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். எதிர்பாராத காம்போவில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருவா, வேல் கம்பு, கருப்பு குதிரை போன்றவை காட்டப்பட்டுள்ளது. எனவே இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அத்துடன் இந்த போஸ்டரும் வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.