கடந்த 2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் கஜினி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ், இந்த படத்தை அமீர் கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்தார். அங்கும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகப் போவதாக சமூக வலைதளங்களை செய்திகள் வெளியாகி வருகிறது.
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏ ஆர் முருகதாஸ், கஜினி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என புதிய தகவல்கள் வெளிவந்தன. அதன்படி இந்தியில் தான் ஏ ஆர் முருகதாஸ், கஜினி 2 திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் இது குறித்து அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா நடிப்பில் தான் கஜினி 2 திரைப்படம் உருவாகப் போவதாகவும் இது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கஜினி முதல் பாகத்தை தயாரித்த சேலம் ஏ சந்திரசேகர் உயிரிழந்துவிட்ட காரணத்தால் ரெட் ஜெயண்ட் போன்ற மற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா கங்குவா, சூர்யா 44 போன்ற படங்களை முடித்துவிட்டு தற்போது சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அடுத்தது வாடிவாசல் போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார். எனவே கஜினி 2 திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.