spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவங்க இல்லாம என்னால சந்தோஷமா ட்ராவல் பண்ணிருக்க முடியாது.... 'ரெட்ரோ' விழாவில் சூர்யா!

அவங்க இல்லாம என்னால சந்தோஷமா ட்ராவல் பண்ணிருக்க முடியாது…. ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா!

-

- Advertisement -

சூர்யாவின் 44வது படமாக உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் வருகின்ற மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.அவங்க இல்லாம என்னால சந்தோஷமா ட்ராவல் பண்ணிருக்க முடியாது.... 'ரெட்ரோ' விழாவில் சூர்யா!இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கிறார். நேற்று (ஏப்ரல் 18) இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருப்பது போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படம் நடிகர் சூர்யாவிற்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சூர்யா, “கொஞ்ச நாளுக்கு முன்னாடி 3000 பேரை பார்த்து கட்டிப்பிடித்து அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்தேன்.

ரத்ததானம் செய்தீர்கள் என்றால் நான் போட்டோ எடுப்பேன் என்று என்னுடைய பிறந்தநாளில் சத்தியம் செய்திருந்தேன். மற்றவர்களை நினைத்து நீங்கள் செய்த காரியத்திற்காக உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என நான் உங்களுடன் போட்டோ எடுத்தேன். போட்டோ எடுக்க வந்த ஒவ்வொருவரும் ‘அண்ணா நீங்க நல்லா இருக்கீங்கல்ல’ என்று மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டீங்க. நீங்க எனக்கு அவ்வளவு அன்பை கொடுக்கிறீர்கள். இந்த படத்தை, இந்த நாளை கொண்டாட வேண்டும் என பல இடங்களில் இருந்து வந்திருக்கீங்க.

we-r-hiring

இந்த அன்பு இருந்தால் போதும் எப்போதுமே நான் நல்லா இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ரெட்ரோ படத்தில் காதல் – சிரிப்பு – போர் என்று பல அடுக்குகள் இருக்கும். உங்களால்தான், உங்கள் அன்பினால் தான் நான் இங்கே இருக்கிறேன். என் கண்ணாடி பூ ஜோவுக்கும் நன்றி. அவங்க இல்லாம என்னால் இவ்வளவு சந்தோஷமாக ட்ராவல் பண்ணி இருக்க முடியாது” என்று பேசினார்.

MUST READ