Homeசெய்திகள்சினிமாசூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா'.... 'மன்னிப்பு' வீடியோ பாடல் வெளியீடு!

சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’…. ‘மன்னிப்பு’ வீடியோ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் மன்னிப்பு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா'.... 'மன்னிப்பு' வீடியோ பாடல் வெளியீடு!

சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்த இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பு டீசரும், ட்ரைலரும் இதன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது போல் வெளியீட்டிற்கு பின்பு படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதையில் தொய்வுகளும் பின்னணிசையில் இரைச்சலும் இருந்த காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு தங்களின் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

we-r-hiring

மேலும் இந்த படம் உலக அளவில் 127 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மன்னிப்பு எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் சூர்யாவிற்கும் சிறுவனுக்குமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ