சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சூர்யாவின் 44 வது படமாகும். இதனை கார்த்திக் சுப்பராஜும், சூர்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்றமே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை, நேரு அரங்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதை நாளில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.