- Advertisement -
நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, திஷா பதானி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் தெரிகிறது.
https://x.com/i/status/1796166771990290755