சூர்யாவின் கர்ணா திரைப்படம் கங்குவா படத்தால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் இந்த படமும் படக்குழுவினரும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த படம் சூர்யாவின் முதல் பான் இந்திய படமாகும். இதைத் தொடர்ந்து சூர்யா மற்றுமொரு பான் இந்திய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா எனும் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கர்ணா திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் கசிந்தது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த கர்ணா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தினால் கர்ணா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -