சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இந்த படம் சூர்யாவின் 44 வது படமாகும். இதனை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே , ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், விது ஆகியோர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் அறிவித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக மே 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.