spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் எப்படி இருக்கு?….. முழு விமர்சனம் இதோ!

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் திரை விமர்சனம்.சூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் இன்று (மே 1) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் ரெட்ரோ. சூர்யாவின் 44ஆவது படமாக வெளியாகி இருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.சூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!

we-r-hiring

கதையின் ஆரம்பத்தில் சூர்யாவின் தந்தை கொல்லப்பட்டு கிடக்க அவரை தன்னுடைய மகனாக வளர்க்க முடிவு செய்கிறார் சுவாசிகா. ஆனால் சுவாசிகாவின் கணவரான கேங்ஸ்டர் ஜோஜு ஜார்ஜுக்கு இது பிடிக்கவில்லை. இருப்பினும் சுவாசிகாவின் மறைவிற்குப் பிறகு சூர்யாவை ஏற்றுக்கொள்கிறார். சூர்யா, ஜோஜு ஜார்ஜை தன்னுடைய அப்பாவாக நினைத்தாலும் ஜோஜு ஜார்ஜ், சூர்யாவை அடியாளாக தான் வளர்க்கிறார். இந்த நிலையில் சூர்யாவிற்கும், பூஜா ஹெக்டேவிற்கும் காதல் மலர தன்னுடைய காதலுக்காக ரௌடிசத்தை விட்டு விட முயற்சிக்கிறார் சூர்யா. சூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!அதேசமயம் கடைசியாக தனது தந்தை சொன்ன வேலையை செய்யும்போது அது அவரை துரத்த ஆரம்பிக்கிறது. இதில் குற்றம் ஒன்றை செய்துவிட்டு சூர்யா ஜெயிலுக்குப் போக, பூஜாவும் அவரை பிரிந்து செல்கிறார். ஒரு பக்கம் ஜோஜு ஜார்ஜ், சூர்யாவை தீர்த்துக்கட்ட துரத்திவர, மற்றொரு பக்கம் சூர்யா பூஜா ஹெக்டேவை தேடி அலைகிறார். இதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் ரெட்ரோ படத்தின் மீதி கதை.'சூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு வழக்கம் போல் படம் முழுவதையும் தாங்கி பிடித்திருக்கிறது. அதிலும் சூர்யா- பூஜா ஹெக்டே இடையிலான காதல் காட்சி அருமை. இந்த வகையில் ருக்மினியாக ஸ்கோர் செய்திருக்கிறார் பூஜா ஹெக்டே. அதிலும் ‘கனிமா’ பாடலுக்கு திரையரங்குகளில் செம வைப். காதல், சண்டை காட்சி, எமோஷனல் என அனைத்திலும் அதகளம் செய்கிறார் சூர்யா. ஜோஜு ஜார்ஜ் வில்லனாக மிரட்டி உள்ளார். நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோரின் நடிப்பு அருமை. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பதை போல் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் ஜொலிக்க வைக்கிறது. சூர்யாவின் 'ரெட்ரோ' படம் எப்படி இருக்கு?..... முழு விமர்சனம் இதோ!வித்தியாசமான கிளைமாக்ஸ் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இருப்பினும் முதல் பாதியில் இருந்த வேகமும், சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும். திரைக்கதையில் பல இடங்களில் சொதப்பிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். மொத்தத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டிய ரெட்ரோ ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் கார்த்திக் சுப்பராஜின் மேக்கிங் ஸ்டைலுக்காகவும் சூர்யாவின் நடிப்பிற்காகவும் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

MUST READ