spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமன்னா - விஜய் வர்மா விரைவில் திருமணம்

தமன்னா – விஜய் வர்மா விரைவில் திருமணம்

-

- Advertisement -
நடிகை தமன்னா பான் இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சினிமாத் துறையில் இருக்கும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்போது இந்த நடிகருடன் உறவில் இருக்கிறார் என்று செய்திகள் கிளம்பும். அந்த வகையில் சமீப காலமாக தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

சமீபத்தில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் இரவில் காரில் உலவும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் பரவி வரும் நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இருவரும் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருப்பதில் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.

MUST READ