Homeசெய்திகள்சினிமாமுன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு வராததால், பொங்கல் ரேசில் வரிசை கட்டும் தமிழ்த் திரைப்படங்கள்!

முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு வராததால், பொங்கல் ரேசில் வரிசை கட்டும் தமிழ்த் திரைப்படங்கள்!

-

- Advertisement -

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப் போனதால், போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் வெளியீட்டிற்கு  படங்களை அறிவிக்கும் படக்குழுவினர்!முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு வராததால், பொங்கல் ரேசில் வரிசை கட்டும் தமிழ்த் திரைப்படங்கள்!

 

தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம், அதிலும் பொங்கல் பண்டிகை மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைக்கும் என்பதால் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுவர். அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நாடிகரான அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு அதற்கு முந்தைய படமான விடாமுயற்சி வெளியாகும் என கூறப்பட்டது.

அதோடு  அருண் விஜயின் வணங்கான், பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ராம்சரன் நடிப்பில் தயாராகியுள்ள கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது விடா முயற்சி திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போவதாக படக்குழு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு அறிவித்தது. 2023 ஆம் ஆண்டில் அஜித்குமாரின் ஒரு படம் கூட வெளியாகாததால் இப்படமும் தற்போது  தள்ளிப்போகிறது என்ற அறிவிப்பு அஜித்  ரசிகர்களை சோகத்தில் கடலில் மூழ்கடித்துள்ளது.

இதே  வேளையில் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள் புத்தாண்டு அன்று, பொங்கல் ரேசில் பல படங்கள் குதித்துள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை, சண்முக பாண்டியனின்  படைத்தலைவன், மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் மெட்ராஸ்காரன், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா, சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ், சுசீந்திரனின் 2k லவ் ஸ்டோரி, தருணம் உள்ளிட்ட 7 படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வரும் என தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள புதிய படங்களோடு பொங்கல் பண்டிகைக்கு தற்போது வரை 9 படங்கள் ரேசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

 

MUST READ