கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ராம் சரண் இந்த படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அதில் அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலியும் மகன் ராம் சரணுக்கு ஜோடியாக அத்வானியும் நடித்திருக்கின்றனர். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே நாளை (ஜனவரி 10) பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் கேம் சேஞ்ஜர் திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தினை நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் மொத்தமாக 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.