spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயூடியூபர் இர்ஃபான் மீது கருணை வேண்டும்... நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்... 

யூடியூபர் இர்ஃபான் மீது கருணை வேண்டும்… நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்… 

-

- Advertisement -
பிரபல யூடியூபர் இர்ஃபான் மீது தமிழக அரசு கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார் 
தமிழகத்தில் மிகவும் பிரபலமான யூடியூபர் என்றால் அது இர்ஃபான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் பிரபலம். இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் இவர் பிரபலம் அடைந்தார்.  இவரது வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பல தரப்பட்ட சினிமா நட்சத்திரங்களுடன் உரையாடி பல வகையான உணவுகளை பற்றி இவர் வெளியிடும் வீடியோவுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு
 அண்மையில்,  தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். இதனால், குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் அறிவித்த இர்ஃபானுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை சமூக வலைதளப்பக்கத்திலிருந்து நீக்கினார். அத்துடன், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநரிடம் மன்னிப்பு கோரி கடிதமும் வழங்கினார்.
ஆனால், தற்போது வரை இர்ஃபான் மீது இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பேசியுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கும் இர்ஃபானுக்கு கருணை காட்டாமல் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

MUST READ