Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ராயன்' படக்குழு!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட ‘ராயன்’ படக்குழு!

-

தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ராயன்' படக்குழு!அந்த வகையில் இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் ப. பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றார். பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு ராயன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், சரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வட சென்னையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழுவினர் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு கவனம் பெற்றனர். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட 'ராயன்' படக்குழு!இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று ராயன் பட குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படம் 2024 ஜூன் மாதத்தில்  வெளியாக இருக்கிறது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ