தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய். விஜயை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய், நடிப்பதில் ஆர்வமில்லாத காரணத்தால் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன்படி ஜேசன் சஞ்சயின் முதல் படத்திற்கு லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
அதன்பின்னர் கதாநாயகன் யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து இந்த படத்தின் ஏற்பட்ட படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. அதன்படி மதுவடலரா 2 படத்தில் நடித்த நடிகை ஃபரியா அப்துல்லா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -