நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள போட் படத்தின் இரண்டாவது பாடல் உருவாகி உள்ளது.
யோகி பாபு மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் பல வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக பூமர் அங்கிள் திரைப்படம் வெளியானது. மேலும் வானவன், மிஸ் மேகி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் யோகி பாபு. இதற்கிடையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் போட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த சர்வைவல் திரில்லர் படமான இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சின்னி ஜெயந்தி எம் எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் நிலையில் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேஷ் மாணிக்கம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தினேஷ் பொன்ராஜ் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் தகிட ததிமி எனும் இரண்டாவது பாடம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். பாடல் வரிகளை கோல்ட் செல்வராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


