spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தலைவன் தலைவி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

‘தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

-

- Advertisement -

தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.'தலைவன் தலைவி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!தமிழ் சினிமாவில் கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இவருடைய இயக்கத்தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தலைவன் தலைவி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருந்தார். பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 'தலைவன் தலைவி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!அந்த வகையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ