தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார்.
மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ் , கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் பூஜை இன்று (அக்டோபர் 4) சென்னையில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.